Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

குறித்த விலையில் விற்க வேண்டும்… மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும்… வேளாண் இணை இயக்குனர் எச்சரிக்கை…!!

அதிக விலைக்கு உரங்களை விற்றால் உறுப்பினர் விற்பனையாளர்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என வேளாண் இணை இயக்குனர் வசுந்தரா தெரிவித்துள்ளார்.

தர்மபுரி மாவட்டத்தில் வசிக்கும் உரங்களை விற்பனை செய்யும் வியாபாரிகள் அவற்றை அதிக விலையில் விற்றால் உரிமம் ரத்து செய்யப்படும் என வேளாண் இணை இயக்குனர் வசந்தரேகா எச்சரிக்கை செய்துள்ளார்‌. இந்நிலையில் காரிப் பருவ சாகுபடி பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் பருவத்திற்கு தேவையான உரங்கள் தேவையான அளவில் தனியார் உர விற்பனை நிலையங்களில் இருந்தும் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களிலும் இருப்புகள் வைத்துள்ளனர். இதனையடுத்து டி.ஏ.பி உரத்திற்கான மானியம் தற்போது உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. இவற்றின் அதிகபட்ச விலையாக 50 கிலோ மூட்டை 1 ,200 ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனையாகி வருகிறது.

அதன் பின் கடைகளின் வாசலில் உர விலைகளை அட்டையில் விவசாயிகளின் பார்வைக்கு தெரியும் வண்ணம்  கடைகளில் வைக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளபட்டுள்ளது. அதில் புகார் தெரிவிக்க வேண்டிய தொலைபேசி எண்களையும் குறிப்பிட வேண்டும் எனவும் அரசு நிர்ணயித்த விலையை விட அதிகபட்ச விலைக்கு உரங்களை விற்றால் உர விற்பனையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் வேளாண்மை இயக்குனர் எச்சரிக்கை செய்துள்ளனர். இதில் விற்பனை முனைய கருவியில் விவசாயிகள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் அவர்களின் ஆதார் எண் கொண்டு கிருமி நாசினி பயன்படுத்தி கைரேகையை பதிவு செய்து பிறகு உர விற்பனை மேற்கொள்ள வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

இவரைத் தொடர்ந்து விவசாயிகள் விருப்பத்தின் படி ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டு இருக்கும் தொலைபேசி எண்ணில் வரும் பாஸ்வேர்டை பயன்படுத்தி விற்பனை முறையை கருவியில் ரசீது அளிக்கலாம் என தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து உரங்களின் விலைகள் குறித்த புகார்கள் ஏதேனும் இருப்பின் விவசாயிகள் தரக்கட்டுப்பாட்டு உதவி இயக்குனரை 9443563977 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். மேலும் இம்மாவட்டத்தில் உள்ள வட்டார வேளாண் உதவி இயக்குனர்களையும் தொடர்பு கொண்டு தகவல்களை தெரிவிக்கலாம் என வேளாண் துணை இயக்குனர் வசந்தரேகா தெரிவித்துள்ளார்.

Categories

Tech |