“ஸ்டாலின் தான் வராரு. விடியல் தர போறாரு’ என்ற பாடலின் இசையமைப்பாளர் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டுள்ளார்.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக தேர்தல் பிரசாரத்தின்போது “ஸ்டாலின்தான் வராரு. விடியல் தரப் போராரு” என்ற பாடல் வெளியாகி மக்கள் மத்தியில் பெரிதும் பிரபலமானது. இந்தப் பாடலை இளம் இசையமைப்பாளர் ஜெரார்டு பெலிக்ஸ் இசை அமைக்க பின்னணி பாடகர் அந்தோணிதாசன் பாடியிருந்தார்.
இந்நிலையில் பட்டிதொட்டியெங்கும் பிரபலமான இப்பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜெரார்டு பெலிக்ஸ், பிரேஷி சாந்தனா என்பவரை திருமணம் செய்துகொண்டுள்ளார். இவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களும், நடிகரும், எம்.எல்.ஏவுமான உதயநிதி ஸ்டாலினும் கலந்து கொண்டுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.