சட்ட விரோதமாக மதுபாட்டில் விற்பனை செய்தவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்
விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசி கிழக்கு பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் அப்பகுதியில் சந்தேகப்படும்படி சுற்றித்திரிந்த ஒருவரை பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் கருணாநிதி காலனி பகுதியில் வசிக்கும் லிங்கசாமி என்பதும், சட்டவிரோதமாக மது பாட்டில்களை மறைத்து வைத்து விற்பனை செய்ததும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனை அடுத்து காவல்துறையினர் அவரிடம் இருந்த 1170 ரூபாய் பணம் மற்றும் 24 மதுபாட்டில்கள் போன்றவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து எம்.புதுப்பட்டி பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது கொத்தன் ஏரி கண்மாய் பகுதியில் சட்டவிரோதமாக மது பாட்டில் விற்பனை செய்த குற்றத்திற்காக கார்த்திக் என்பவரை கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரிடமிருந்த 8 மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.