Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

யாரு இந்த வேலைய பண்ணிருப்பா…? அதிர்ச்சியடைந்த மேலாளர்… வலை வீசி தேடும் காவல்துறையினர்….!!

மர்ம நபர்கள் சூப்பர் மார்க்கெட் குடோன் ஷட்டரை உடைத்து பல லட்சம் ரூபாய் பணத்தை திருடி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரபல சூப்பர் மார்க்கெட் அமைந்துள்ளது. இந்த நிறுவனத்தின் மொத்த சேமிப்பு குடோனில் மேலாளராக கரூர் மாவட்டத்தில் வசிக்கும் வசந்தன் என்பவர் பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் இரவு நேரத்தில் ஷட்டரை இழுத்து மூடிவிட்டு வசந்தன் வீட்டிற்கு சென்று விட்டார். அதன்பின் மறுநாள் காலை வந்து பார்த்த போது குடோனின் ஷட்டர் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

அதன் பின் உள்ளே சென்று பார்த்த போது வங்கியில் கட்டுவதற்காக வைத்திருந்த 7 லட்சத்து 9 ஆயிரத்து 173 ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றதை அறிந்து உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அங்கு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |