மோட்டார் சைக்கிள் சக்கரத்தில் சேலை சிக்கியதால் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்தில் உள்ள அரசபட்டி கிராமத்தில் கருப்பு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அக்கம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு கார்த்திக் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் கார்த்திக் உடல் நலம் சரியில்லாத தனது தாயை அழைத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அதன்பின் சிகிச்சை பெற்று இரண்டு பேரும் வீட்டிற்கு புறப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து இவர்கள் அரசபட்டி அருகே சென்று கொண்டிருந்த போது, அக்கம்மாளின் சேலை திடீரென மோட்டார் சைக்கிள் சக்கரத்தில் சிக்கி விட்டது. இதனால் நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி அக்கம்மாள் பரிதாபமாக இறந்து விட்டார். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.