தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. இதனால் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வரும் ஊரடங்கில் பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும் எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் வழங்கப்பட்டன. இதனையடுத்து மேலும் நீடிக்கப்பட்ட ஊரடங்கானது ஜூலை-5 முடிவடைய உள்ளது.
இந்நிலையில் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் புதிய தளர்வுகள் தொடர்பாக மருத்துவக் குழுவினர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் மூன்று வகையாகப் பிரிக்கப்பட்ட மூன்று மாவட்டங்களை ஒன்றாக்கி தளர்வுகள் தர முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி பாதிப்பு அதிகம் இருந்த கோவை, ஈரோடு உள்ளிட்ட 11 மாவட்டங்களில் தொற்று குறைவதால் அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே மாதிரியான தளர்வுகள் தர முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.