திருப்பூரில் புதிதாக நியமனமான சப்- கலெக்டர் பதவியேற்று மக்களுக்கு அறிவுரை வழங்கினார் .
திருப்பத்தூர் மாவட்டத்தில் சப் கலெக்டராக வேலை பார்த்துவந்த வந்தனாகார்க் பதிலாக டாக்டர் அலர்மேல்மங்கை புதிதாக நியமிக்கப்பட்டு பதவி ஏற்று கொண்டார். இவருக்கு தாசில்தார் சிவப்பிரகாசம் மற்றும் சப் கலெக்டரின் நேர்முக உதவியாளர் உமாரம்யா போன்றோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றுள்ளனர். இதனையடுத்து நியமனமான சப்-கலெக்டர் பேசியபோது, எனது சொந்த ஊர் பழனி என்றும் நான் எம்.பி.பி.எஸ் முடித்துவிட்டு, பின் ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெற்று திருநெல்வேலியில் பயிற்சி முடித்துள்ளேன் என்றும் கூறியுள்ளார். எனவே தற்போது நேரடியாக கலெக்டராக பொறுப்பேற்றுக் கொண்டது மகிழ்ச்சியாக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
இதனைதொடர்ந்து மாவட்டத்தில் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து பொதுமக்கள் நேரடியாக தொடர்பு தெரிவிக்க முடியாத நிலையில் பெட்டியில் அல்லது ஆன்லைன் மூலம் கொடுக்கும் தகவலின்படி உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று சப்-கலெக்டர் அலர்மேல்மங்கை தெரிவித்துள்ளார். ஆகவே எந்த நேரத்திலும் பொதுமக்கள் என்னை தொடர்பு கொண்டு தங்களது குறைகளை தெரிவிக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் தற்போது கொரோனா வைரஸ் தொற்று காலமாக இருப்பதனால் அரசு விதிக்கப்பட்டுள்ள விதிமுறைகளை பொதுமக்கள் கடைப்பிடித்து நடப்பதற்கு அறிவுரை வழங்கினார்.