கேஜிஎஃப் 2 படத்தின் தென்னிந்திய ஆடியோ உரிமையை பிரபல நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான ‘கேஜிஎஃப்’ திரைப்படம் தேசிய அளவில் பிரபலமானது. இதையடுத்து இரண்டாம் பாகமும் வெற்றிகரமாக எடுத்து முடிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியான கேஜிஎஃப்2 படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், கேஜிஎஃப் 2 படத்தின் தென்னிந்திய ஆடியோ உரிமையை லஹரி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதனை அவர்கள் 7 கோடியே 20 லட்சம் கொடுத்து வாங்கியுள்ளனர். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். ஆகையால் ரசிகர்கள் மத்தியில் கேஜிஎஃப்2 படத்திற்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.