தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான மற்றும் மக்களுக்கு பயன்படும் வகையில் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா இக்கட்டான காலத்தில் மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இவ்வாறு முதல்வர் மட்டுமல்லாமல் திமுக அமைச்சர்களும் பல அதிரடியான நடவடிக்கைகள் எடுத்து வருவதால் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எ.வ வேலு, சென்னையில் வள்ளுவர் கோட்டத்தை சீரமைக்கும் பணி தொடங்க உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் வள்ளுவர் கோட்டத்தை கடந்த அரசு சரியாக பராமரிக்கவில்லை. வள்ளுவர்கோட்டம் தமிழர்களின் அடையாளமாக திகழ்கிறது. எனேவ பிற மொழியினர் வள்ளுவரின் புகழை அறியும் வண்ணம் ஏற்பாடுகள் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.