கடந்த பிப்ரவரி மாதம் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டமானது வன்னியர்கள் மத்தியில் பெரும் பாராட்டுக்களையும் வரவேற்பையும் பெற்றது. இருப்பினும் பல தரப்பிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன. அந்தவகையில் தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட உள் ஒதுக்கீடு அரசியல் சாசனத்திற்கு எதிரானது. முழுமையாக கணக்கெடுக்கபடாமல் குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டும் உள்ஒதுக்கீடு வழங்க முடியாது. இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனுக்கள் மீதான விசாரணையில், வன்னியர் சமுதாயத்திற்கு 10.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்குவதற்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது. சென்னை சந்தீப் குமார், சிவகங்கை முத்துக்குமார் வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே உள்ள வழக்குடன் சந்தீப், முத்து வழக்கும் சேர்த்து விசாரிக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.