Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

பெற்றோர் எடுத்த முடிவால்…. தப்பி சென்ற மாணவி…. காவல்துறையினரின் நடவடிக்கை….!!

மாணவிக்கு நடைபெற இருந்த கட்டாய திருமணத்தை காவல்துறையினர் நிறுத்தி வாலிபரை சட்டத்தின்கீழ் கைது செய்தனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மட்றம்பள்ளி கிராமத்தில் 17 வயது மாணவி ஒருவர் வசித்து வருகின்றார். இவர் பிளஸ்-2 படித்துள்ளார். அதே ஊரில் வசித்து வரும் செல்வன் மகன் ராஜேஷ் பெங்களூரில் செருப்புக்கடை ஷோரூமில் பணிபுரிந்து வருகின்றார். இவர்கள் இருவருக்கும் திருமணம் நடத்துவதற்கு குடும்பத்தினர் பேசி வைத்து இருந்தனர். ஆனால் 17 வயது மாணவி தனக்கு திருமணம் வேண்டாம் தான் படிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால் திருமணத்திற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்து விட்டதாக பெற்றோர் கூறியுள்ளனர். எனவே திருமணம் வேண்டாம் என்று கூறிய அந்த மாணவியை வீட்டில் அடைத்து வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அந்தப் மாணவி மெதுவாக வீட்டிலிருந்து தப்பி ஓடி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார. அந்தப் புகாரில் தனக்கு 17 வயது ஆகிறது என்றும் என்னை 28 வயதுடைய வாலிபருக்கு திருமணம் நடத்துவதற்கு முயற்சி செய்வதாகவும் கூறப்பட்டுள்ளது. எனவே இந்த திருமணத்தை உடனடியாக தடுத்து நிறுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவி புகார் அளித்துள்ளார். இதனையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கவுரி விசாரணை நடத்தியதில் அண்ணாநகரில் மாணவியின் சித்தி வீட்டில் வைத்து கட்டாய திருமணம் செய்ய முயற்சித்த ராஜேசை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். மேலும் கட்டாய திருமணத்திற்கு உதவிய மாணவியின் சித்தி, அவருடைய கணவர் மற்றும் மட்றப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த சங்கர் ஆகிய 3 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Categories

Tech |