சட்ட விரோதமாக மதுபாட்டில்களை கடத்தி சென்ற ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வடக்குத்தெரு கொட்டாவூர் பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த காரை சந்தேகத்தின் பெயரில் நிறுத்தி காவல்துறையினர் சோதனை செய்துள்ளனர். அந்தக் காரில் இருந்த 210 மதுபாட்டில்களை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். அதன்பின் இதுபற்றி காரில் வந்தவர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர்.
அந்த விசாரணையில் அவர் சேலம் மாவட்டத்தில் வசிக்கும் அஜித் என்பதும் இவர் மதுபாட்டில்களை வாங்கி கடத்திச் சென்றதும் தெரிய வந்துள்ளது. மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அஜித்தை கைது செய்து அவரிடம் இருந்த மது பாட்டில்கள் மற்றும் கார் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.