ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் உருவாகியுள்ள சிவகுமாரின் சபதம் படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக வலம் வரும் ஹிப் ஹாப் ஆதி மீசைய முறுக்கு படத்தின் மூலம் நடிகராகவும், இயக்குனராகவும் அறிமுகமானார். இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து இவர் நடிப்பில் நட்பே துணை, நான் சிரித்தால் ஆகிய படங்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது . தற்போது ஹிப் ஹாப் ஆதி சிவகுமாரின் சபதம் என்ற படத்தை இயக்கி நடித்துள்ளார் .
Get your dancing shoes on! #SivakumarPondati Video song is out now on @ThinkMusicIndia – https://t.co/fXorF8zueA@TGThyagarajan presents, a @SathyaJyothi_ and #IndieRebels production – #SivakumarinSabadham pic.twitter.com/suWk5BKagY
— Hiphop Tamizha (@hiphoptamizha) July 2, 2021
சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. மேலும் இன்று இந்த படத்தின் முதல் பாடல் வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்நிலையில் சிவகுமாரின் சபதம் படத்தில் இடம்பெற்ற ‘சிவகுமார் பொண்டாட்டி’ என்கிற பாடல் இன்று வெளியாகியுள்ளது. ரசிகர்களை கவர்ந்த இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது .