தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்டங்களையும் முதல்வர் ஸ்டாலின் செய்து வருகிறார். கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழக அரசு வழங்கி வருகிறது. அதுமட்டுமல்லாமல் பெண்களுக்கு சிறப்பு சலுகைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் சுகாதார தளத்தினை சர்வதேச அளவில் உயர்த்த வேண்டும் என்று மருத்துவத் துறை செயல்பாடுகள் தொடர்பான ஆய்வுக் கூட்டத்தில் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார். சர்வதேச தரத்தை இலக்காக கொண்டு மருத்துவமனைகள், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவம் சார்ந்த மாணவர்கள் உருவாக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.