Categories
தேசிய செய்திகள்

நாட்டில் 71 மாவட்டங்களில் மட்டுமே…. மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக ஊரடங்கு அமல் படுத்தப் படுவது மற்றும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன் பலனாக பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. அதனால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.

இந்நிலையில் நாட்டில் 71 மாவட்டங்களில் மட்டுமே 10 சதவீதத்திற்கும் மேல் பாதிப்பு விகிதம் பதிவாகி வருவதாக மத்திய சுகாதாரத் துறை இணைச் செயலாளர் லவ் அகர்வால் தெரிவித்துள்ளார். கொரோனா இரண்டாம் அலையின்பாதிப்பு நாடு முழுவதும் குறைந்து வருவதை அடுத்து தற்போது நிலவரம் குறித்து மத்திய சுகாதாரத் துறை இணைச் செயலாளர் கூறுகையில், கடந்த வாரத்தை விட கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் விகிதம் 13 சதவிகிதம் குறைந்துள்ளது. தற்போது நாள்தோறும் சராசரியாக 46 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதியாகி வருகிறது. 71 மாவட்டங்களில் பாதிப்பு விகிதம் 10 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. உலக அளவில் அதிக தடுப்பூசிகளை செலுத்தி நாடாக இந்தியா உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |