Categories
உலக செய்திகள்

இயற்கையின் அடுத்த பாதிப்பு…. சிக்கி தவிக்கும் பிரபல நாடு…. வெளியே வரவேண்டாம் என மக்களுக்கு எச்சரிக்கை….!!

கிரேக்க நாடு கடுமையான வெயிலின் பிடியில் சிக்கி தவித்து வருகிறது.

கொரோனாவின் கோரப் பிடியில் சிக்கி தவித்த கிரேக்க நாடு சிறிது சிறிதாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. இந்நிலையில் கடந்த பத்து நாட்களாக கடுமையான வெயில் மற்றும் அனல் காற்று வீசி வருவதால் ஒரு நாளின் வெப்பநிலை 43 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகியுள்ளது. இதனால் மக்கள் தங்களின் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கடுமையான அனல் காற்று வீசுவதால் பிரபல சுற்றுலா தலமான Acropolis  மூடப்படும் என்றும் மேலும் இது மக்களின் நலன் கருதி  இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே கடந்த 2000 மற்றும் 2007ம் ஆண்டுகளில் கடுமையான அனல் காற்று வீசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |