Categories
தேசிய செய்திகள்

ZYCOV-D மருந்தை செலுத்த ஊசி தேவையில்லை… குஜராத்தைச் சேர்ந்த நிறுவனம் கண்டுபிடிப்பு….!!!

குஜராத்தை சேர்ந்த சைடஸ் கேடிலா என்ற நிறுவனம் ZYCOV-D மருந்தை மூன்று கட்ட பரிசோதனை செய்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கு விண்ணப்பித்துள்ளது.

இந்தியாவில் பரவி வரும் கொரோனா தொற்று காரணமாக பல மாநிலங்களில் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. முன்பு இருந்ததைவிட தற்போது மக்கள் ஆர்வமாக தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு முன் வருகின்றனர். மேலும் தற்போது இந்தியாவைப் பொறுத்தவரை தற்போது கோவேக்சின், கோவிஷீல்டு மற்றும் ஸ்புட்னிக் வி தடுப்பூசிகள் தற்போது பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் அமெரிக்க தயாரிப்பான மாடர்னா தடுப்பூசிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. மேலும் தற்போது டெல்டா பிளஸ் வைரஸ் இந்தியா மட்டுமல்லாமல் பல நாடுகளிலும் பரவி வருகிறது.

இந்நிலையில் குஜராத் மாநிலத்தை சேர்ந்த சைடஸ் கேடிலா என்ற நிறுவனம் ZYCOV-D என்னும் கொரோனா மருந்தை மூன்று கட்ட பரிசோதனை செய்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கு அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளது. இந்த மருந்தை உடலில் செலுத்துவதற்கு ஊசி தேவையில்லை. ஸ்ப்ரிங் பவர் கருவி மூலம் தோலில் உள்ள நுண்துளைகள் வழியாக செலுத்த முடியும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |