ரோட்டில் சென்று கொண்டிருந்த லாரி நிலை தடுமாறி எதிரே சென்ற கார் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
தர்மபுரி மாவட்டத்திற்கு கணவாய் வழியாக மராட்டிய மாநிலத்தில் இருந்து வெங்காய மூட்டை ஏற்றிக்கொண்டு திருநெல்வேலி நோக்கி லாரி ஓன்று வந்துள்ளது. இந்நிலையில் இந்த லாரியை செல்வகணபதி என்பவர் ஓட்டி வந்துள்ளார். இதனையடுத்து கணவாயின் அருகில் வந்து கொண்டிருக்கும் போது ஓட்டுனரின் செயல்பாட்டை இழந்த லாரி சாலையில் தாறுமாறாக ஓடி முன்னால் சென்று கொண்டிருந்த கார் மீது மோதி கீழே விழுந்துள்ளது. இந்த விபத்தில் கார் நொறுங்கி சேதமடைந்துள்ளது. இதில் காரில் வந்த 6 நபர்கள் மற்றும் லாரி ஓட்டுனர் என 7 பேரும் இவ்விபத்தில் காயமடைந்துள்ளனர்.
இதனை பற்றி தகவலை அறிந்த காவல்துறையினர் அருகில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்ததால் சம்பவ இடத்திற்கு விரைவாக சென்றுயுள்ளனர். பின்னர் விபத்தில் காயமடைந்த 7 பேரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அதில் அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதன்பின் இவ்விபத்து காரணத்தால் தேசிய நெடுஞ்சாலையில் 3 மணி நேரத்திருக்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பிறகு வெங்காயம் மூட்டைகளையும் லாரி மற்றும் கார் ஆகியவற்றை கிரேன் மூலமாக அப்புறப்படுத்தி போக்குவரத்தை காவல்துறையினர் சீர் செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.