Categories
மாநில செய்திகள்

73 நாட்களுக்குப்பின்… விசாரணை கைதி உடல் ஒப்படைப்பு…!!!

திருநெல்வேலி மாவட்டம் வாகை குலத்தை சேர்ந்த முத்து மனோ என்பவர் ஒரு வழக்கு காரணமாக கைது செய்யப்பட்டு ஏப்ரல் 22-ஆம் தேதி பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார். இவர் சிறையில் அடைக்கப்பட்ட ஒரு மணி நேரத்தில் சக கைதி ஒருவர் இவரை கொலை செய்து விட்டதாக கூறப்பட்டது. இதையடுத்து கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை நாங்கள் உடலை வாங்க மாட்டோம் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

மேலும் இறந்தவரின் உடலை ஜூலை 2-ஆம் தேதிக்குள் பெற்றுக்கொள்ள வேண்டுமென்று உறவினர்களுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் 73 நாட்களுக்கு பிறகு இன்று அவரின் உடலை உறவினர்கள் பெற்றுக் கொண்டனர். திருநெல்வேலி மாநகரம் மற்றும் அந்த பகுதியை சுற்றியுள்ள அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அசம்பாவிதம் எதுவும் நடக்காமல் தவிர்ப்பதற்காக வாகைகுளம் செல்லும் நெடுஞ்சாலைகளிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இது மட்டுமில்லாமல் ஏற்கனவே முத்து மனோ குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |