திருமணமான 4 மாதத்தில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள உப்பூர் கிராமத்தில் ரத்தினவேல் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கும் பாளையங்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த கிருபாகரன் என்பவரின் மகள் பிரதீபாவுக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 வயதில் நிவிதா என்ற பெண் குழந்தை இருக்கின்றது. இதில் ரத்தினவேல் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் பிரதீபா வீட்டின் பின்புறத்தில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு வெள்ளத்துரை மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிரதீபாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதனையடுத்து பிரதீபாவின் தந்தை கிருபாகரன் முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில் “தனது மகளை மாமனார், மாமியார் மற்றும் நாத்தனார் கொடுமைபடுத்தி வந்துள்ளதாகவும் மகள் சாவில் சந்தேகம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது”. மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எனவே இறந்த பிரதீபாவுக்கு திருமணமாகி 4 ஆண்டுகளே இருப்பதனால் மன்னார்குடி ஆர்டி.ஓ விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.