Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

கண்டிப்பா கிடைக்கணும்… பொதுமக்களின் நலனுக்காக… போராட்டம் நடத்திய கட்சிக்காரர்கள்…!!

பேருந்து நிலையம் அருகாமையில் நிவாரண நிதி தொகையான 7, 500 ரூபாயை பொதுமக்களுக்கு கிடைக்க வேண்டும் என கட்சியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்மபுரி மாவட்டத்திலுள்ள பாப்பாரப்பட்டி பேருந்து நிலையம் அருகில் கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பாக டீசல் மற்றும் பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்டாரச் செயலாளர் சின்னசாமி தலைமை தாங்கியுள்ளார். அதன்பின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வட்டார செயலாளர் பெருமாள் முன்னிலை வகித்து உள்ளார். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயற்குழு உறுப்பினர் அர்ஜுனன் ஆர்ப்பாட்டம் பற்றி அங்கே பேசியுள்ளார்.

இதனை அடுத்து கொரோனா நிவாரண நீதியான 7, 500 ரூபாய் பொதுமக்களுக்கு சரியாக வழங்க வேண்டும் எனவும், செங்கல்பட்டு தடுப்பு மருந்து உற்பத்தி வளாகத்தை மாநில அரசிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து அனைத்து பொதுமக்களுக்கும் இலவச தடுப்பூசி வழங்க வேண்டும் எனவும், டீசல் மற்றும் பெட்ரோல் விலை உயர்வை குறைக்க வேண்டும் என அங்கே கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Categories

Tech |