Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

இவ்வளவு கோவிஷில்டு மருந்துகள் வந்திருக்கு…. பொதுமக்கள் பயன்பெறனும்…. அதிகாரியின் தகவல்….!!

வேலூரில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் 4,500 டோஸ் தடுப்பூசி மருந்துகள் வந்துள்ளது.

வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் 18 வயது மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 11 நிரந்தர தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஆரம்ப, நகர்ப்புற சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

இவ்வாறு மாவட்டத்தில் இதுவரை 3 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. எனவே 3 ஆயிரம் தடுப்பூசி மருந்து கையிருப்பில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் இருந்து இந்த மாவட்டத்திற்கு 4,500 கோவிஷில்டு மருந்துகள் வந்துள்ளது. இந்த தடுப்பூசி சிறப்பு முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு பொதுமக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |