Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் இதுவரை 34 கோடி டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது…. சுகாதாரத் துறை அறிவிப்பு…!!!

இந்தியாவில் இதுவரை சுமார் 34 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் ஒவ்வொரு நாளும் பரவி வந்த தொற்று காரணமாக அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி போடுவது தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. கொரோனா தொற்றை ஒழிப்பதற்கு தடுப்பூசி மட்டுமே ஒரே வழி என்பதால், மக்கள் அனைவரையும் தடுப்பூசி போட்டுக்கொள்ள மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. அதுமட்டுமில்லாமல் முன்பிருந்ததை மக்கள் தற்போது தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு ஆர்வமாக முன்வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது இந்தியாவில் இதுவரை சுமார் 34 கோடி தடுப்பூசி செலுத்தப்பட உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 18 வயது முதல் 44 வயது வரை உள்ளவர்களுக்கு இதுவரை 9 கோடியே 61 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இதனிடையே இந்தியாவில் கொரோனவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தை எட்டியுள்ளது. உயிரிழப்பில் உலக அளவில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.

Categories

Tech |