பாலியல் வழக்கில் கைதான அமைச்சர் மணிகண்டன் இரண்டு நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
திருமணம் செய்து கொள்வதாக தன்னை ஏமாற்றிய தாகவும், கட்டாயமாக கருக்கலைப்பு செய்ததாகவும், அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக தன்னை மிரட்டியதாக நடிகை சாந்தினி அளித்த புகாரின் பெயரில் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது அடையாறு அனைத்து மகளீர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து தலைமறைவாக இருந்த அவரை காவல்துறையினர் பெங்களூருவில் கைது செய்தனர். அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் மணிகண்டன் முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார். இந்த மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில் சிறையில் இருக்கும் முன்னாள் அமைச்சரும் மணிகண்டனை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு இருந்த நிலையில், அதனை சைதாப்பேட்டை நீதிமன்றம் மறுத்தது. இதையடுத்து தற்போது சென்னை உயர்நீதிமன்றம் 2 மற்றும் 3ம் தேதிகளில் முன்னாள் அமைச்சர் மணிகண்டனை மதுரைக்கு அழைத்துச் 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்கவும், மொபைல் எண்ணை கண்டுபிடிக்கவும் அனுமதி வழங்கியுள்ளது.