கனடாவில் பள்ளிக்கு அருகே சுமார் 182 கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கனடாவில் இருக்கும் பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில் செயின்ட் யூஜின்ஸ் என்னும் பள்ளிக்கூடம் அமைந்துள்ளது இந்த பள்ளிக்கூடம் கத்தோலிக்க திருச்சபையால் கடந்த 1912 ஆம் ஆண்டு துவக்கப்பட்டு 1970 ஆம் ஆண்டு வரை இயங்கியுள்ளது.
இதனையடுத்து தற்போது இந்த செயின்ட் யூஜின்ஸ் என்னும் பள்ளிக்கு அருகே சுமார் 182 கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை இந்த கல்லறைகளில் அடக்கம் செய்யப்பட்டிருக்கும் உடல்கள் செயின்ட் யூஜின்ஸ் பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்களின் சடலங்களாக இருக்கலாம் என்ற சந்தேகம் கன்னட பொதுமக்களிடையே எழுந்துள்ளது.