பெட்ரோல் டீசல் விலை உயர்வு காரணமாக ஜேசிபி வாடகை உயர்த்தப்பட்டுள்ளதாக ஜேசிபி உரிமையாளர் சங்கத் தலைவர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வரலாறு காணாத வகையில் பெட்ரோல், டீசல் விலை கடும் உயர்வை எட்டி வருகின்றது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். ஆட்டோ, லாரி, டாக்ஸி உரிமையாளர்கள் பெட்ரோல் டீசல் விலை உயர்வு காரணமாக பெரும் பாதிப்பு அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். அந்தவகையில் ஜேசிபி வாகனம் வைத்திருப்பவர்களும், பெட்ரோல் டீசல் விலை உயர்வு காரணமாக ஜேசிபி இயந்திரத்தின் வாடகையை உயர்த்த உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
பெட்ரோல் டீசல் விலை உயர்வால் தென்மாவட்டங்களில் ஒரு மணி நேரத்திற்கு ஜேசிபி இயந்திரத்தின் வாடகை ரூபாய் 1500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கால் திருப்பூர், கோவை மாவட்டங்களில் குறைந்த அளவிலான வாகனங்களை இயங்கி வருகின்றன. உரிமையாளர்களுடன் கலந்து ஆலோசித்த பின் விரைவில் வாடகை உயர்த்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.