இளவரசர் வில்லியம் மற்றும் ஹரி ஆகிய இருவரும் சேர்ந்து மறைந்த இளவரசி டயானாவின் சிலை திறப்பு நிகழ்ச்சியில் மகிழ்ச்சியுடன் பங்கேற்றுள்ளனர்.
இளவரசி டயானாவின் 60-வது பிறந்தநாளை முன்னிட்டு பிரித்தானியாவில் இளவரசர் ஹரி மற்றும் வில்லியம் ஆகிய இருவரும் சேர்ந்து தாயாரின் நினைவாக அவருடைய சிலை ஒன்றை கென்சிங்டன் மாளிகையில் திறந்து வைக்க முடிவெடுத்து அதற்கான ஏற்பாடுகளையும் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து டயானாவின் சிலை திறப்பு நிகழ்ச்சி நேற்று மதியம் 2 மணிக்கு நடைபெற்றுள்ளது.
அதில் இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசர் ஹரி ஆகிய இருவரும் சேர்ந்து மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டுள்ளனர். அந்த நிகழ்ச்சியில் டயானாவின் உறவினர்கள் சிலரும் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் ஹரியின் மாமாவும் இளவரசி டயானாவின் சகோதரருமான Earl Spencer ஹரியையும் வில்லியமையும் இணைக்கும் ஒரு வாய்ப்பாக இந்த நிகழ்ச்சி அமைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.