Categories
இந்திய சினிமா சினிமா

”ஜிகர்தண்டா பாபி சிம்ஹா கதாபாத்திரம்” தேசிய விருது பெறுவாரா  வருண் தேஷ்…!!

ஜிகர்தண்டா படத்தின் தெலுங்கு ரீமேக்_கான வால்மீகி படத்தில் பாபி சிம்ஹா  கதாபாத்திரத்தில் வருண் தேஷ் நடிக்கிறார்.

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சித்தார்த் , பாபி சிம்ஹா , விஜய் சேதுபதி , லட்சுமி மேனன் , கருணாகரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து மெகா ஹிட்டான படம் ஜிகர்தண்டா. இந்த படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இதில் நடித்த பாபி சிம்ஹா விற்கு தேசிய விருது கிடைத்ததை தொடர்ந்து வால்மீகி என்ற பெயரில் தெலுங்கில் இந்த படம் ரீமேக் செய்யப்பட்டது.

இந்த படத்தில் வருண் தேஷ் பாபி சிம்ஹா வேடத்திலும், சித்தார்த் கதாபாத்திரத்தில் நடிகர் அதர்வாவும் நடித்துள்ளார்கள். தற்போது செப்டம்பர் 20ஆம் தேதி படம் வெளியாக உள்ளது. தேசிய விருது பெற்ற பாபி சிம்ஹா கதாபாத்திரத்தில் வருண் தேஜ் எப்படி நடித்திருக்கிறார் என்பதை நாம் பொறுத்திருந்து காண வேண்டும்.

Categories

Tech |