சட்டவிரோதமாக மது விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள புளியங்கண்ணு பகுதியில் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் அப்போது சந்தேகப்படும் படி நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரித்துள்ளனர்.
அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் சங்கர் கணேஷ் என்பதும், சட்டவிரோதமாக கள்ளச்சந்தையில் மது பாட்டில்கள் விற்பனை செய்து கொண்டிருந்ததும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனை அடுத்து சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்த குற்றத்திற்காக காவல்துறையினர் சங்கர் கணேஷ் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.