கோவில் குளத்தில் கிடந்த ஆண் ஒருவரின் சடலம் காரணத்தினால் பொதுமக்களிடையை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில் குளத்தில் 30 வயதுடைய ஆண் சடலம் கிடந்துள்ளது. இந்நிலையில் யார் அவர், எந்த ஊரைச் சேர்ந்தவர் என எவ்வித விவரமும் தெரியவில்லை. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் கிராம நிர்வாக அதிகாரியிடம் தெரிவித்துள்ளனர்.
இதனை அடுத்து கிராம நிர்வாக அதிகாரி பாலாஜி இது பற்றி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.