ரேஷனில் கைரேகை பதிவு மீண்டும் தொடங்கப்பட்டு மக்கள் பொருட்களை பெற்று சென்றனர்.
தமிழ்நாட்டில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த சில மாதங்களாக ரேஷனில் கைரேகை பதிவு நடைபெறாமல் குடும்ப அட்டை வைத்திருப்பவர்களுக்கு அரிசி, பருப்பு போன்ற பல வகையான பொருட்கள் கொடுக்கப்பட்டு வந்தது.
ஆனால் தற்போது கொரோனா தொற்று குறைந்து வருவதால் மீண்டும் ரேஷன் கடைகளில் கைரேகை பதிவு செய்து பொருட்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி வேலூர் மாவட்டத்தில் உள்ள 698 ரேஷன் கடையிலும் இந்த முறை தொடங்கப்பட்டது. இதனையடுத்து குடும்ப அட்டைதாரர்கள் தங்களது கைரேகையை பதிவு செய்து அரிசி, சர்க்கரை போன்ற உணவு பொருட்களை வாங்கி சென்றனர்.