Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

6 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள்…. இந்தந்த பகுதிகளுக்கு பணி மாற்றம்…. டி.ஐ.ஜியின் உத்தரவு…..!!

6 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் டி.ஐ.ஜி. உத்தரவின்படி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் 6 போலீஸ் இன்ஸ்பெக்டர்களாக பணியாற்றி வந்தவர்கள் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி மாவட்ட தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் அசோகன், பொருளாதார குற்றப்பிரிவிற்கு மாற்றம் செய்யப்பட்டார். எனவே அங்கு பணியாற்றிய சந்திரகுமார் பொன்னைக்கும், அங்கு பணியாற்றிய காண்டீபன் ஆற்காடு தாலுகாவுக்கும் பணியிட  மாற்றம் செய்யப்பட்டனர்.

இதனையடுத்து ஆற்காடு தாலுகா காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த பாலு செய்யாறுக்கும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஹேமமாலினி திருவண்ணாமலை தாலுகாவுக்கும், வேலூர் மாவட்ட குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவில் பணிபுரிந்து வந்த செந்தில்குமார் கே.வி. குப்பத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் டி.ஐ.ஜி ஏ.ஜி பாபு உத்தரவின்படி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Categories

Tech |