Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

இங்க தான் வச்சிருக்காங்களா…மொத்தமாக 8 கோடி ரூபாய் மதிப்பு… காவல்துறையினரின் செயல்…!!

சட்ட விரோதமாக ஆந்திர மாநிலத்தின் 353 செம்மரக்கட்டைகளை கடத்தி வந்ததை கண்டுபிடித்து காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தண்டலம் பகுதியில் செம்மரக்கட்டைகளை பதுக்கி வைத்து இருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில் ஆந்திர மாநிலத்தின் காவல்துறையினரும் மற்றும் இம்மாவட்டத்தில் காவல் துறையினரும் இணைந்து அப்பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இதனையடுத்து 353 செம்மரக்கட்டைகள் 2 வாகனங்களில் அடுக்கி வைத்து இருப்பதாக தெரியவந்துள்ளது. அதன்பின் 8 டன் எடை கொண்ட செம்மரக்கட்டைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்து ஆந்திரா மாநிலத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர். மேலும் காவல்துறையினரால் பறிமுதல் செய்த செம்மரக்கட்டைகளின் மதிப்பானது 8, 00, 000 ரூபாய் என தெரியவந்துள்ளது.

Categories

Tech |