Categories
தேனி மாவட்ட செய்திகள்

ராணுவ வீரர் மனைவி மயமான வழக்கு… கணவர் அளித்த திடுக்கிடும் தகவல்… போலீசார் தீவிர விசாரணை…!!

தேனி மாவட்டத்தில் 1 1/2 ஆண்டிற்கு முன் மயமான ராணுவ வீரர் மனைவி வழக்கில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

தேனி மாவட்டம் பாரஸ்ட் ரோடு 12-ஆம் தெருவில் ஈஸ்வரன்(26) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சென்னையில் ராணுவ வீரராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் இவருக்கும் மதுரை உசிலம்பட்டியை சேர்ந்த கிரிஜா பாண்டி(24) என்ற பெண்ணுக்கும் கடந்த 2018ல் திருமணம் ஆகியுள்ளது. இதனையடுத்து திருமணமான சில மாதங்களிலேயே ஈஸ்வரன் கிரிஜா பாண்டியனிடம் வரதட்சணை கேட்டு கொடுமை படுத்தியுள்ளனர். இதனால் உசிலம்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கிரிஜா புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து செய்துள்ளனர். இதனால் ஈஸ்வரனை ராணுவ பணியிலிருந்து சில மாதம் பணியிடை நீக்கம் செய்துள்ளனர்.

இதனையடுத்து ஈஸ்வரன் தனது மனைவியுடன் சேர்ந்து வாழ்வதாக கூறி 2019ஆம் ஆண்டில் கிரிஜாவை அழைத்து சென்றுள்ளார். அதிலிருந்து கிரிஷா பெற்றோர் வீட்டிற்கு வரவில்லை செல்போனிலும் தொடர்பு கொண்டு பேசவில்லை. இந்நிலையில் கிரிஜாவின் தந்தை அவரை பார்க்க தேனிக்கு சென்றுள்ளார். அங்கு ஈஸ்வரன் கொடுத்த முகவரியில் யாரும் இல்லாததால் சந்தேகமடைந்த அவர் உடனடியாக தேனி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில் ஈஸ்வரனின் குடும்பத்தினர் அடிக்கடி வீடு மாற்றி வந்தது வெளிவந்துள்ளது.

இதனைத்தொடர்ந்து போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் வசித்து வந்த ஈஸ்வரன் மற்றும் அவரது சகோதரனை சந்தேகத்தின் படி பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டே ஈஸ்வரன் கிரிஜாவை கொலை செய்து அவரது உடலை தேனியில் உள்ள அரண்மனைப்புதூர் முல்லைப்பெரியாற்றில் வீசியதாக தெரிவித்துள்ளனர். மேலும் போலீசார் அவர்களை கைது செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |