மணல் கடத்தலில் ஈடுபட்டிருந்த 7 பேரை போலீசார் கைது செய்தனர் .
திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுக்கா தூசி போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது உக்கல் கிராமத்தை சேர்ந்தவர்கள் சிலர் செய்யாறு ஆற்றுப்படுகையில் மாட்டு வண்டிகளில் மணல் கடத்தலில் ஈடுபட்டிருந்தன. இதைக்கண்ட போலீசார் அவர்களை மடக்கி பிடித்து கைது செய்தனர்.
இந்த மணல் கடத்தலில் கைது செய்யப்பட்ட ஞானவேல், குமார், செல்வம் ,முத்து உட்பட ஏழு பேர் உக்கல் கிராமத்தை சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்தது .இதையடுத்து 7பேரை கைது செய்த போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்த 8 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர். இதில் தப்பிச்சென்ற வீரன் என்பவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.