Categories
சினிமா தமிழ் சினிமா

”39_ஆவது பிறந்தநாள் கொண்டாடிய ஜெயம் ரவி”….சினிமாவில் தூக்கிவிட்ட அண்ணன்…!!

நடிகர் ஜெயம் ரவி நேற்று தனது 39_ஆவது பிறந்தநாளை கொண்டாடினார்.

ஜெயம் ரவி தனது 39வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். ஜெயம் படம் மூலம் சினிமாவில் அறிமுகமாகி அதையே இன்றளவும் அடைமொழியாக கொண்டு தமிழில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் நடிகர் ஜெயம் ரவி. அவரது அப்பா பிரபல படத்தொகுப்பாளர் எடிட்டர் மோகன் ஆவார். தயாரித்த அந்த படத்தில்தான் அவரது அண்ணன் ராஜாவுடன் இணைந்து அறிமுகமானார். ஜெயம் ரவி முதல் படமே அவருக்கு நல்ல அறிமுகத்தைக் கொடுத்தது. தொடர்ந்து இரண்டாவது படமான எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி படம் மூலம் அனைவரின் கவனத்தையும் பெற்றார்.

குறிப்பாக உனக்கும் எனக்கும் படம் மூலம் தனக்கென ஃபேமிலி ஆடியன்சை உருவாக்கினார். ஜெயம் ரவியின் இத்தகைய வெற்றிக்கு காரணம் அவரது அண்ணனும் இயக்குனருமான ராஜா. அவருடைய ஜெயம் , எம் குமரன் , உனக்கும் எனக்கும் , சந்தோஷ் சுப்பிரமணியம் , தில்லாலங்கடி, தனி ஒருவன் ஆகிய படங்களுக்கு அவரது அண்ணன் தான் இயக்குனர். அதில் தனி ஒருவன் தவிர மற்ற அனைத்துமே ரீமேக் படங்கள். ஆனால் ரீமேக் படங்களிலும் வெற்றி பெற்றவர் நடிகர் ஜெயம்ரவி மட்டும்தான்.

படத்திற்கு படம் வித்தியாசம் காட்டும் ஜெயம்ரவி ஒருபுறம் காதல் , மறுபுறம் ஆக்ஷன் படங்களிலும் நடித்து அசத்துவார். தனி ஒருவன் படத்திற்கு பிறகு அவர் நடிக்கும் கதைகள் பெரும்பாலும் சமூக அக்கறை சார்ந்ததாகவே இருந்து வருகின்றது. பாடல்களைப் பொறுத்தவரை அவரின் பட பாடல்கள் மாபெரும் வெற்றியை பெற்று விடும். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான கோமாளி திரைப்படம் அவருக்கு நீண்ட நாட்களுக்கு பிறகு மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்துள்ளது.

Categories

Tech |