கடகம் ராசி அன்பர்களே..!
இன்று வாயை அடக்கிருப்பது மிகவும் நல்லது.
பேச்சில் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும். வாக்குவாதங்கள் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பெண்கள் செலவுகளைக் கட்டுப்படுத்திக் கொள்ளவேண்டும். செலவுகள் அதிகமாக இருக்கும். வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் இன்று நிகழக்கூடும். புதிய திருப்பங்கள் ஏற்படும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் போட்டிகளை சந்திக்க வேண்டியதிருக்கும். போட்டிகளைத் தாண்டிதான் முன்னேறிச் செல்ல வேண்டியதிருக்கும். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு இருக்கும்.
உறவினர்களின் வருகையும் இருக்கும். பெரிய தொகையைப் பயன்படுத்தி தொழில் செய்ய வேண்டாம். ஒற்றுமைக் குறைவு உண்டாகக்கூடிய காலம் என்பதால் விட்டுக்கொடுத்து நடந்துக்கொள்வது நல்லது. மனதை ஒருநிலைப்படுத்த வேண்டும். திருமண வரன்கள் நல்ல விதத்தில் வரக்கூடும். பெற்றோர்களிடம் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பிங்க் நிறத்தில் ஆடை அணியவேண்டும். பிங்க் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுத்துவிட்டு இன்றைய நாளை தொடங்குங்கள் இன்றையநாள் சிறப்பாக இருக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு.
அதிர்ஷ்டமான எண்: 1.
அதிர்ஷ்டமான நிறம்: பிங்க் மற்றும் மஞ்சள் நிறம்.