விசுவாசம் , என்னை அறிந்தால் படத்தில் நடிகர் அஜித்தின் மகளாக நடித்த அனிகா மூன்றாவது முறையாக அஜித்துடன் இணையவுள்ளார்.
மலையாள சினிமாவில் 2010-ஆம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அனிகா சுரேந்திரன். இவர் தமிழ் சினிமாவில் நடிகர் அஜித்தின் மகளாக என்னை அறிந்தால் படத்தில் நடித்து அசத்தினார். அதைத்தொடர்ந்து மிருதன் படத்தில் நடித்த அனிகா மீண்டும் இந்த ஆண்டில் வெளியான அஜித்தின் விசுவாசம் படத்தில் இரண்டாவது முறையாக நடிகர் அஜித்தின் மகளாக நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றார்.
இந்நிலையில் அவர் மீண்டும் மூன்றாவது முறையாக நடிகர் அஜித்துடன் நடிக்க உள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் அனிகா அறிவித்துள்ளார். நடிகர் அஜித் அடுத்ததாக நேர்கொண்டபார்வை படத்தை இயக்கிய வினோத் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் மீண்டும் அஜித்துக்கு மகளாக நடிக்க உள்ளாரா அல்லது வேறு ஏதும் கதாபாத்திரம் ஏற்க உள்ளார் என்பது குறித்து முடிவாக வில்லை தல அஜித்துடன் அனிகா 3_ஆவது முறையாக இணைவதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
https://twitter.com/anikhaoffl_/status/1171070873089888257