இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ வங்கிக்கு நாடு முழுவதும் கோடிக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். எஸ்பிஐ தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய சேவையை அறிமுகம் செய்து வருகின்றது. அந்தவகையில் நடப்பு கணக்கு வாடிக்கையாளர்களுக்காக நாடு முழுவதும் 360 சேவை மையங்களை அமைத்துள்ளது. இதுகுறித்து எஸ்பிஐ வெளியிட்ட அறிக்கையில், தேர்ந்தெடுக்கப்பட்ட கிளைகளில் மட்டும் இந்த சேவைமையங்கள் மைக்கப்பட்டுள்ளது.
நடப்புக் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் பிரச்சினைகளைத் தீர்க்கவும், புதிய வாடிக்கையாளர்களை சேர்க்கவும் அமைக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் தங்களுடைய வங்கி கணக்கு பணிகளை டிஜிட்டல் மயமாக்க இது உதவும் என்று தெரிவித்துள்ளது .சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்கான வரம்புகள், செக் புக்கிற்கான வரம்புகள் ஆகியவற்றையும் எஸ்பிஐ வங்கி திருத்தியுள்ளது. இதற்கான புதிய விதிகள் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.