Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

பார்த்ததும் கதறிய தம்பி… அண்ணனுக்கு நடந்த விபரீதம்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

வாலிபரை கட்டையால் அடித்து கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூர் பகுதியில் லட்சுமணன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு சண்முகசுந்தரி என்ற மனைவி உள்ளார். இந்தத் தம்பதிகளுக்கு சிவமுருகன் மற்றும் முத்தரசன் என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இவர்களில் சிவமுருகன் டிப்ளமோ என்ஜினீயரிங் படித்து முடித்துவிட்டு சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு தற்போது புனேயில் வேலை கிடைத்துள்ளதால் அங்கு செல்வதற்கு முன்பு  தனது சொந்த ஊருக்கு சென்றுள்ளார். இந்நிலையில் சிவமுருகன் வெளியே சென்றுவிட்டு வருவதாக தனது தாயான சண்முகசுந்தரியிடம் கூறிவிட்டு நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததால் அவரின் தாயார் மகனுக்கு போன் செய்துள்ளார். அப்போது அந்த போனை சிவமுருகனின் நண்பரான வனமுத்துக்குமார் என்பவர் எடுத்து அவர் செந்திலாண்டவர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் வளாகத்தில் விளையாடிக்கொண்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து சிவமுருகன் இரவு நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததால் அவரின் தம்பியான முத்தரசன் மற்றும் சிவ முருகனின் நண்பரான வனமுத்துக்குமாருடன் இணைந்து அப்பகுதிக்கு சென்று தேடி பார்த்துள்ளார்.  அப்போது அந்த வளாக பகுதியில் அமைந்துள்ள சமையல் அறையின் முன்பு சிவமுருகனின் முகம் மற்றும் தலையில் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடப்பதைப் பார்த்த அவரின் தம்பி அதிர்ச்சி அடைந்து அலறி சத்தம் போட்டுள்ளார். அந்த அலறல் சத்தத்தை கேட்டு அருகில் இருந்தவர்கள் விரைந்து சென்று பார்த்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சிவ முருகனின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இது குறித்து காவல் துறையினர் அப்பகுதியில் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் சிவ முருகனும், வாவு பகுதியில் வசிக்கும் அவரின் நண்பரான சண்முகசுந்தரும் இணைந்து மது குடித்துக் கொண்டிருக்கும் போது இருவருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அந்த வாக்குவாதத்தில் சிவமுருகன் மற்றும் சண்முகசுந்தரும்  ஒருவரை மாற்றி ஒருவர் தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளனர். இதனால் கோபமடைந்த சண்முகசுந்தர் அங்கிருந்த கட்டையை எடுத்து சிவமுருகனின் தலையில் பலமாக தாக்கி விட்டு அங்கிருந்து சென்று விட்டார். இதில் பலத்த காயமடைந்த சிவமுருகன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார் என்று காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சிவமுருகனை கட்டையால் அடித்து கொலை செய்த சண்முகசுந்தரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |