தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் சமூக வலைத்தளங்களை அதிக அளவு பயன்படுத்துகின்றனர். அதில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் போன்ற வை அதிகளவு பயன்படுத்தப்படுகிறது. அதில் பயனாளர்கள் தங்கள் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் போன்றவற்றை பதிவிடுவது வழக்கம். இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் வரும் காலங்களில் புகைப்படங்கள் பதிவிட முடியாது என இன்ஸ்டாகிராம் தலைவர் ஆடம் மொசெரி தெரிவித்துள்ளார்.
டிக் டாக், யூடியூப் ஷாட்ஸ் போல இன்ஸ்டாகிராம்-ஐயும் வீடியோ தளமாக மாற்றவும், மெசேஞ்சர்,ஷாப்பிங் உள்ளிட்டவைகளில் கூடுதல் கவனம் செலுத்தி புதிய சேவைகளை வழங்கவும் திட்டமிட்டுள்ளதால், எதிர்காலத்தில் புகைப்படம் பதியும் தளமாக இன்ஸ்டாகிராம் இருக்காது என்று அவர் தெரிவித்துள்ளார்.