தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். தற்போது ஊரடங்கில் சில தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளதால் குறிப்பிட்ட அளவிலான பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பயணிகளின் அத்தியாவசிய தேவைகளுக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் விழுப்புரத்தில் இருந்து இன்று பகல் 12.5 மணிக்கு புறப்பட உள்ள வண்டி எண் 06170 விழுப்புரம் – புருலியா சிறப்பு ரயில் நான்கு மணி நேரம் தாமதமாக மாலை 4.05 மணிக்கு புறப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 7.05 மணிக்கு புறப்பட உள்ள வண்டி எண் 02822 சிறப்பு ரயில் 75 நிமிடங்கள் தாமதமாக இரவு 8.30 மணிக்கு புறப்படும் என தெரிவித்துள்ளது.