Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

என்ன செஞ்சாலும் திருந்த மாட்டீங்களா… வசமாக சிக்கிய தொழிலாளி… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

தடையை மீறி, கஞ்சா விற்பனை செய்த தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கே.வி.கே பகுதியில் கூலித் தொழிலாளியான மாரிக்கண்ணன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவர் அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வந்துள்ளார். இது குறித்து தகவலறிந்த காவல் துறையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்ற போது அங்கு மாரிக்கண்ணன் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்ததைப் பார்த்து அவரை கையும், களவுமாக பிடித்துவிட்டனர்.

இதனையடுத்து காவல்துறையினர் மாரிக் கண்ணன் விற்பனைக்காக வைத்திருந்த 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த குற்றத்திற்காக மாரிக் கண்ணணை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |