இந்தியாவில் உருமாறிய டெல்டா வகை வைரஸ் உலகை ஆதிக்கம் செலுத்தும் என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. எளிதாக பரவக்கூடிய டெல்டா வகை கொரோனா தற்பொழுது 100 நாடுகளில் பரவியுள்ளது. குறிப்பாக அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் கடுமையாக பரவி வருகிறது. டெல்டா வகை வைரஸ் விரைவில் உலகம் முழுவதும் பரவ வாய்ப்பு உள்ளதாகவும் உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் உலகம் முழுவதும் சுமார் 100 நாடுகளில் டெல்டா மாறுபாடு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, உலகம் கொரோனா தொற்றின் மிகவும் ஆபத்தான கட்டத்தில் இருப்பதாக உலக சுகாதார மைய இயக்குனர் மருத்துவர் டெட்ரோஸ் அதானோம் எச்சரிக்கை விடுத்துள்ளார். மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.