இளம்பெண்களை வைத்து வீட்டில் விபச்சாரம் நடத்திய வழக்கில் 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் அடைக்காகுழி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் விபச்சாரம் நடைபெற்று வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி இன்ஸ்பெக்டர் அந்தோணியம்மாள் தலைமையில், காவல்துறையினர் அந்த பகுதிக்கு விரைந்து சென்று ஜெயக்குமாரி என்பவரது வீட்டில் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு இருந்த இளம்பெண்கள் காவல்துறையினரை கண்டதும் அங்கிருந்து தப்பிவிட்டனர்.
இதனையடுத்து அங்கு இருந்த ஜெயக்குமாரி, கேர மாநிலத்திலுள்ள பூவார் பகுதியில் வசித்து வரும் மேரி, மார்த்தாண்டம் வடக்குத் தெருவைச் சேர்ந்த கவிதா, பைங்குளம் பருத்திக்கடவை சேர்ந்த அஜிகுமார், பாலராமபுரத்தை சேர்ந்த கண்ணன், மார்த்தாண்டத்தை சேர்ந்த சுமித் ஆகிய 6 பேரையும் காவல்துறையினர் மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் ஜெயக்குமாரி, மேரி, கவிதா ஆகிய 3 பேரும் புரோக்கர்களாக இருந்ததும் அங்கு விபச்சாரம் நடந்ததும் காவல்துறையினருக்கு தெரியவந்தது. அதன்பின் காவல்துறையினர் 6 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.