இன மத பேதமின்றி கொண்டாடப்படும் ஓணம் திருநாளன்று நடைபெறும் சிறப்பு நிகழ்வுகளை இந்த செய்தி தொகுப்பில் காண்போம்:
ஓணம் கேரளாவின் அறுவடைத் திருவிழாக்களில் மிகவும் முக்கியமான ஒன்றாகும். இந்த பருவ காலத்தில் வழிபடுதல், இசை, நடனம், விளையாட்டு, படகு போட்டி மற்றும் நல்உணவு ஆகியவை முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த விழாவானது சின்னம் என்ற மலையாள மாதத்தில் அதாவது ஆகஸ்ட் இறுதியிலும் செப்டம்பர் துவக்கத்திலும் தொடங்கும். இது ஒரு அறுவடை திருவிழா இது ஓராண்டு கால கடின உழைப்பிற்கு பரிசாக கொண்டாடப்படுகிறது. இத்திருவிழாவில் திருச்சூரில் மிகப்பெரிய ஊர்வலம் பம்பை ஆற்றில் வியப்பூட்டும் படகு பந்தயங்கள் நடைபெறும்.
பெண்மணிகள் நிறைய நகைகளை அணிந்துகொண்டு பலவண்ண வடிவங்களில் ரங்கோலி-கோலங்கள் வீட்டு முன் போடுவர். ஓனம் என்பது மகாபலி சக்கரவர்த்தியின் நினைவாக கொண்டாடப்படுகிறது. ஓண தினத்திற்கு முந்தைய நாள் பாரம்பரிய வழிபாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த பண்டிகையின் சிறப்பு உணவுகளில் பாயசம் என்பது ஒன்று. இது ஒன தினத்தன்று வழங்கப்படுகிறது.
இப்பண்டிகையில் ஒரு பெரிய படகு பந்தயம் நடைபெறும் இதில் நூற்றுக்கணக்கானவர்கள் படகுளில் தாளம் போட்டு பாட்டு பாடி தாளங்களுக்கு ஏற்றவாறு படகினை ஓட்டுவார்கள். இதன் சிறப்பு என்னவென்றால் ஒவ்வொரு படகின் மேலும் ஒரு குடை அதன் கீழ் தங்க நாணயங்களும் தொங்கவிடப்பட்டிருக்கும். இதில் வெற்றி பெற ஒவ்வொரு படகும் போட்டி போட்டுக் கொண்டு செல்வது கண்கொள்ளா காட்சியாக இருக்கும். ஓணம் இந்துக்களால் மட்டுமல்லாமல் கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்கள் ஆகியோர்களாலும் கொண்டாடப்படுகிறது.
இத்திருவிழா தான் இனம், மதம் பாகுபாடின்றி அனைவரையும் ஒன்றிணைக்கிறது. மேலும் இந்த ஓணம் பண்டிகையின்போது மரம் ஏறுதல், கயிறு இழுத்தல் உள்ளிட்ட வீரவிளையாட்டுகள் ஆண்களுக்காக நடத்தப்படும். பெண்கள் ஓணத்திற்கென்று ஸ்பெஷலாக வடிவமைக்கப்பட்ட சேலையை அணிந்து கொண்டு வீட்டு வாசலில் அத்தப்பூ கோலமிட்டு ஊஞ்சல் கட்டி ஆடி மகிழ்வார்கள்.