Categories
மாநில செய்திகள்

தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்டப்படும் – அமைச்சர் துரைமுருகன்…!!!

தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான மற்றும்  மக்களுக்கு பயன்படும் வகையில் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா இக்கட்டான காலத்தில் மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இவ்வாறு முதல்வர் மட்டுமல்லாமல்  திமுக  அமைச்சர்களும் பல அதிரடியான நடவடிக்கைகள் எடுத்து வருவதால் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், “மார்கண்டேய நதி தமிழ்நாட்டின் தென்பெண்ணையாற்றில் கலக்கும் நதி என்பதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே அணை விவகாரத்தில் நடுவர் மன்றத்தின் மூலம் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்ட அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும்” என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |