Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

வெளுத்து வாங்கிய மழை…. மிகவும் சிரமப்பட்ட மக்கள்…. தீயணைப்பு துறை வீரர்களின் பணி….!!

இடி மின்னலுடன் கூடிய கனமழை காரணமாக வீடுகளில் மழைநீர் புகுந்து மக்கள் சிரமப்பட்டு வந்துள்ளனர்.

தமிழகத்தில் வருகின்ற 5-ம் தேதி வரையிலும் பரவலாக மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. அதன்படி திருப்பத்தூர் மாவட்டத்தில் மாலை 5 மணி அளவில் மழை இலேசாக பெய்ய தொடங்கி பின் இரவு முதல் இடி மின்னலுடன் கூடிய மழை வெளுத்து வாங்கியது. இதனால் திருப்பத்தூர், அண்ணாநகர், கலைஞர் நகர் பகுதிகளில் உள்ள வீட்டிற்குள் மழைநீர் புகுந்து பொதுமக்கள் விடிய விடிய தூங்காமல் அவதிப்பட்டு வந்துள்ளனர். இதனையடுத்து பல்வேறு தெருக்களில் உள்ள பள்ளங்கள் மற்றும் கால்வாய்களில் நீர் பெருக்கெடுத்து ஓடியது.

மேலும் பல இடங்களில் மரங்கள் முறிந்து சாய்ந்தது. அதன்பின் வாணியம்பாடி, உதயேந்திரம், அலசந்தாபுரம், திம்மாம்பேட்டை, நாராயணபுரம் போன்ற பகுதிகளில் மாலை 5 மணி அளவில் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் நகரத்தில் உள்ள தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி காணப்பட்டது. இதனைதொடர்ந்து பெய்த கனமழையால் காட்டாறு, மண்ணாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆவாரம் குப்பம் பகுதியில் பாலாற்றில் கலந்து இருகரைகளையும் ஒட்டியபடி மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இவ்வாறு காற்றுடன் பெய்த கனமழை காரணமாக சில இடங்களில் சாய்ந்த மரங்களை தீயணைப்பு துறை வீரர்கள் அந்த பகுதிக்கு சென்று அகற்றினர்.

Categories

Tech |