வீட்டிற்குள் நுழைந்த சாரைப்பாம்பை 1 மணி நேர போராட்டத்திற்கு பின்பு வாலிபர் லாவகமாக பிடித்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி புது டவுன் பகுதியில் மருத்துவர் பசுபதி வாழ்ந்து வருகின்றார். இவரது வீட்டின் பிற்பகுதியில் வந்த சாரை பாம்பை கண்டு வீட்டில் இருந்தவர்கள் ஜாப்ரபாத் பகுதியிலுள்ள பாம்பு பிடிக்கும் வாலிபர் இலியாஸ்கான் என்பவருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்த இலியாஸ்கான் 1 மணி நேர போராட்டத்திற்கு பின்பு 11 அடி நீளமுள்ள அந்த சாரப்பாம்பை லாவகமாக பிடித்துள்ளார். இதனையடுத்து அந்த சாரைப்பாம்பை வாலிபர் சாக்குமூட்டையில் கட்டி ஆலங்காயத்தில் உள்ள வனதுறையினரிடம் கொண்டு சென்று ஒப்படைத்தார். அதன்பின் வனத்துறையினர் அந்த சாரப்பாம்பை அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் கொண்டு விட்டனர்.