தமிழகத்தில் கொரோனா அச்சறுத்தல் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு அனைத்து மாணவர்களுக்கும் பொதுத் தேர்வுகள் நடத்த படாமலேயே ஆல்பாஸ் அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது. இந்நிலையில் அடுத்த கல்வி ஆண்டு தொடங்கிவிட்டது. இதற்கு மத்தியில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையவில்லை என்பதால் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
ஒருசில பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கின் காரணமாக கொரோனா குறைவதால் ஜூலை மூன்றாவது வாரத்தில் பள்ளிகளைத் திறக்க வேண்டும் என்று ஆசிரியர் சங்கம் கோரிக்கை வைத்துள்ளனர். கல்வி தேவை, மாணவர் நலன் கருதி நடவடிக்கை எடுக்க முதல்வருக்கு மாநில தலைவர் இளமாறன் கோரிக்கை வைத்துள்ளார். பள்ளிகள் திறக்கும் போது மாணவர்களுக்கு நோய் எதிர்ப்புச் சத்து மாத்திரைகளை வழங்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.